வங்ககடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் - ஆந்திரா இடையே கரையை கடந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்தது. தென்மேற்கு மற்றும் அதனையொட்டி மத்திய மேற்கு வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.