குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான புதிய காற்றழுத்தம், புதன் கிழமை காலைக்குள் மேலும் வலுவடைய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் புதன் கிழமையன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி, நாகை , திருவாரூர், தஞ்சை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்படுள்ளது.