சென்னையில் வழக்கம் போல் மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலையில், ஒரு சவரனுக்கு 5 ஆயிரத்து 40 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. Related Link ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு? ஒரே நாளில், ஒரு கிராமுக்கு 630 ரூபாய் உயர்ந்து, சென்னையில் ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 20 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உள்ளது. ஜெட் வேகத்தில் தங்கம் விலை சிறிது ஆறுதலுக்குப் பின்னர், மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது தங்கம், வெள்ளியின் விலை. நேற்று பிப்ரவரி 3ஆம் தேதி, வர்த்தக நேர முடிவின்போது ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து அதிர்ச்சி தந்த தங்கம் விலை, இன்று பிப்ரவரி 4ஆம் தேதி, காலையிலேயே ஒரு சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்தது. ஒரு கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900 ஆக இருந்தது. ஒரு சவரன் ரூ.1,19,200க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையும் அதிகரிப்பு வெள்ளியின் விலை நேற்று பிற்பகலில், ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை ஆன நிலையில் இன்று, மேலும் ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.320 ரூபாயாக இருந்தது. பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.3,20,000க்கும் விற்பனை ஆனது. இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில், தங்கம் - வெள்ளியின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஜனவாரி 30, 31ஆம் தேதிகளிலும், பிப்ரவரி 2ஆம் தேதியும் தங்கம் விலை ஏறிய வேகத்தில், இறங்கி பொது மக்களுக்கு நிம்மதி தந்தது. மூன்று நாளில் சவரனுக்கு ரூ.22,800 வரை குறைந்தது. இந்த விலை குறைப்பு நீடிக்காதா? என்று ஏங்கிய நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை மொத்தமாக சவரனுக்கு ரூ.2,560 அதிகரித்தது. இன்றும் விலை உயர்வு தொடர்ந்தது. Related Link அதிருப்தியில் அண்ணாமலை