மேற்கு வங்கத்தில் விடுப்பு மறுக்கப்பட்டதால் சக ஊழியர்களை கத்தியால் குத்திவிட்டு, ரத்தம் சொட்டும் கத்தியுடன் சாலையில் நடந்து வந்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். மாநில அரசு ஊழியரான அமித்குமார் சர்கார் என்பவர், ரத்தக்கறை படிந்த கத்தியுடன் சாலையில் ஆக்ரோஷமாக நடந்து வந்த நிலையில், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அச்சமடைந்து கத்தியை கீழே போடுமாறு கூறியுள்ளனர். போக்குவரத்து காவலர் ஒருவரும் கத்தியை போடுமாறு கடுமையாக எச்சரிக்கவே, அமித்குமார் கத்தியை போட்டுவிட்டு போலீசில் சரணடைந்தார். விடுப்பு மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமித்குமார், கத்தியால் குத்தியதில் காவலாளி ஒருவர் காயமடைந்தது விசாரணையில் தெரிய வந்தது.