டெல்லியில் ராணுவ கண்டோன்மெண்ட் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொன்றதாக 19வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.. தன்னை அண்ணா என அழைத்த சிறுமியை தனியாக அழைத்து சென்று தவறாக நடக்க முயன்ற போது சிறுமி கத்தியதால் கழுத்தை நெறித்து கொன்று விட்டு அதை தற்கொலை போல் சித்தரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.