கர்நாடகா... காதலித்த இளைஞரை கரம்பிடித்த மகிழ்ச்சியில் காரில் சென்று கொண்டிருந்த இளம்பெண். மாலையும் கழுத்துமாக இருந்த ஜோடியை காரில் வந்து வழிமறித்த கும்பல். அடுத்த சிலநிமிடங்களில் இளைஞர் கட்டிய தாலியை அவரது முகத்திலேயே தூக்கி வீசிய இளம்பெண். ஆசையாக திருமணம் செய்த அடுத்தநொடியே தாலியை கழற்றி இளைஞர் முகத்தில் வீசியது ஏன்? காரை வழிமறித்த கும்பல் யார்? பின்னணி என்ன?உருகி உருகி காதலிச்ச இளைஞரையே கல்யாணமும் பண்ணிட்டோம் அப்டிங்குற சந்தோஷத்துலயே கார்ல போயிட்டு இருந்துருக்காங்க இளம்பெண். பல எதிர்ப்புக்கு மத்தியில கல்யாணம் பண்ணிட்டு மாலையும் கழுத்துமா போயிட்டுருந்த ஜோடியை பொண்ணோட பெற்றோரும் உறவினர்களும் மடக்கி பிடிச்சிருக்காங்க. அப்போ, கண் காணாத தேசத்துக்குபோய் நாங்க வாழ்ந்துக்குறோம், எங்கள விட்ருங்கனு ரெண்டுபேரும் கையெடுத்து கும்பிட்ருக்காங்க. ஆனா, பொண்ணோட சொந்தக்காரங்க அந்த இடத்தவிட்டு நகருற மாதிரியே தெரியல. அடுத்து ரெண்டு பேரையும் பக்கத்துல உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு போய்ருக்காங்க. அங்க இருந்த போலீசார், மாப்பிள்ளை கோலத்துல இருந்த இளைஞரை பாத்து ஷாக் ஆகிருக்காங்க. அதுக்குப்பிறகு இளைஞரை பத்தின பல விஷயத்தை காவலர்கள் சொன்னப்ப தான் பெண் வீட்டார் ஏன் கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சாங்க அப்டிங்குற விஷயமே வெளியவந்தது.கர்நாடக மாநிலம், சிக்கபல்லாபூர் நகர்ல உள்ள கங்கனமித்தே லே அவுட்ல வசிக்கிறவருதான் சந்தீப். 28 வயசான இந்த இளைஞர் பெயிண்டிங் வேலை பாத்துட்டு இருக்காரு. சும்மா பேருக்குதான் பெயிண்ட்டிங் வேலை. இளைஞரோட மெயின் வேலையே பணக்கார பொண்ணுங்கள குறிவச்சி கல்யாணம் பண்றது, அந்த பெண்கள்கிட்ட இருந்து நகை, பணத்தை சுருட்டுறது, அப்றம் அந்த பொண்ணுகளுக்கு டாட்டா காட்றது இது தான். அடுத்து, வேறொரு பணக்கார பொண்ணா தேர்ந்தெடுத்து அதே பார்மெட்டையே ரீப்பிட்டா பண்றதுதான் சந்தீப்போட வழக்கம். 21 வயசுலயே தன்னோட பிராடுத்தனத்தை ஆரம்பிச்சிருக்காரு சந்தீப். அப்படி ஏமாந்த சில பெண்கள் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட்டு குடுத்து வழக்கும் பதிவாகிருக்குது. சிக்கபல்லாபூர் பகுதியில உள்ள ஒரு 16 வயசு சிறுமியை காதலிச்சி கல்யாணம் பண்ணி, போலீஸ்ல சிக்குன சந்தீப் அடுத்து பெங்களூர் ராமமூர்த்தி நகர்ல ஒரு பொண்ண கல்யாணம் செய்து ஏமாத்தியிருக்கான். அடுத்து, பிரசாந்த் நகர்ல உள்ள ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி முடிஞ்சவரைக்கும் பணம், நகையை பறிச்சிட்டு அந்த பொண்ணுக்கும் அல்வா குடுத்துருக்கான். அது சம்மந்தமாவும் வழக்கு பதிவாகி இருக்குது. இதுக்கு மத்தியிலதான் 18 வயசான ஒரு இளம்பெண்ணை தன் காதல் வலையில விழ வச்சிருக்கான் சந்தீப். பொண்ணோட காதல் விவகாரம் செல்போன் வாட்ஸ்அப் உள்ள எஸ்எம்எஸ், போட்டோக்கள் மூலமா பெற்றோருக்கு தெரிஞ்சிருக்குது. ஏற்கனவே கல்யாண மன்னன் சந்தீப்போட பழைய ஹிஸ்ட்ரி எல்லாமே இளம்பெண்ணோட பெற்றோருக்கும் தெரியும் அப்டிங்குறதால மகளை கண்டிச்சதோட அட்வைஸ் பண்ணிருக்காங்க. சந்தீப்போட வேலையே கல்யாணம் பண்ணி ஏமாத்துறது தான், அதனால அவனை நம்பாதன்னு சொன்ன பொண்ணோட அண்ணன் இளைஞரையும் கண்டிச்சிருக்காரு. ஆனா, நம்ம காதலை பிரிக்கிறதுக்காக உங்க அப்பா, அம்மா, அண்ணன் எல்லாருமே நாடகம் ஆடுறதா வாய்கூசாம இளம்பெண்கிட்ட பொய் சொல்லிருக்கான் சந்தீப். இளைஞரோட நடிப்ப நம்புன இளம்பெண்ணும் யாரு என்ன சொன்னாலும் நான் நம்பமாட்டேனு காதல்ல உறுதியா இருந்துருக்காங்க. அதனால, அம்மா, அப்பா இல்லாத நேரமா பார்த்து வீட்டைவிட்டு வெளியேறி சிந்தாமணி பகுதியில உள்ள ஒரு கோவில்ல வச்சி சந்தீப்பை கல்யாணமும் பண்ணிருக்காங்க. வீட்ல இருக்க நகை பணம் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துரு, யாரு கண்ணுலயும் படாம போய் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்னு ஏற்கனவே இளைஞன் சொன்னதால இளம்பெண்ணும் எல்லாத்தையும் எடுத்துட்டுதான் வீட்டவிட்டு வந்துருக்காங்க.இதுக்கு மத்தியில வீட்ல இருந்த மகளையும், பீரோவுல இருந்த நகை, பணத்தையும் காணாததால பதறுன பொண்ணோட பெற்றோர் சந்தீப் தான் அழைச்சிட்டு போயிருக்கணும்னு கெஸ் பண்ணிட்டாங்க. அதனால, ஊரைவிட்டு போகணும்னா எந்த சாலைகள்ல வாகனங்கள் போகுமோ அத்தனை சாலைகள்லயும் சொந்தபந்தங்கள் மூலமா கார்ல ரவுண்டு கட்ட ஆரம்பிச்சிருக்காங்க. நினைச்சமாதிரியே சித்லகட்டா நகர்ல உள்ள ஒரு சாலையில கார்ல வந்த மகளையும், சந்தீப்பையும் சுத்தி வளைச்சி பிடிச்சி, சிக்கபல்லாபூர் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க பொண்ணோட பெற்றோர். அங்கபோனபிறகுதான், சந்தீப் கல்யாண மன்னன் அப்டிங்குறதும் பல பெண்களை ஏமாத்திருக்காங்குறதும் இளம்பெண்ணுக்கே தெரிஞ்சிருக்குது. அதுக்குப்பிறகு, ஆத்திரத்துல சந்தீப் கட்டுன தாலியை அவனோட முகத்துலயே கழட்டி வீசுன இளம்பெண், தன் அப்பா அம்மாக்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அவங்ககூடயே போய்ட்டாங்க. அதோட, இளம்பெண் கொண்டு போன நகையும், பணமும் சந்தீப்கிட்ட சிக்காம தப்பிச்சது. இதையும் பாருங்கள் - வெள்ளிப்பட்டறை ஓனருடன் தகாத உறவு