ஆந்திரா... பணிக்கு சென்ற கணவனை காணவில்லை என தெருத்தெருவாக தேடி அலைந்த மனைவி. வெகுநேரமாகியும் கணவன் வீடு திரும்பாததால் காவல் நிலையத்தில் புகார். புகார் அளித்த சில நிமிடங்களிலேயே வந்த அதிர்ச்சி தகவல். பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தவரை கடத்திச் சென்று கொலை செய்ததோடு, சடலத்தை குழி தோண்டி புதைத்தது யார்? கொலையாளிகள் சிக்கினார்களா? நடந்தது என்ன?ஆந்திரா மாநிலம், திருப்பதில உள்ள மதனபள்ளிய சேர்ந்த நாகராஜுக்கும், கங்காதேவிக்கும் கடந்த எட்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்துருக்கு. ஒரு பிரைவேட் கம்பெனில வேலை பாத்துட்டு இருந்த நாகராஜுவோட நண்பன் நரசிம்மளு. ரெண்டு பேருமே ஒரே கம்பெனில வேல பாத்துட்டு இருந்துருக்காங்க.. நரசிம்மளு, நாகராஜுவ பாக்குறதுக்காக அடிக்கடி வீட்டுக்கு வந்திருக்காரு. அப்ப, கங்காவுக்கும், நரசிம்மளுவுக்கும் இடையில பழக்கம் ஏற்பட்டிருக்கு. கணவனோட பிரண்ட்ங்குற முறையில பேசிப்பழக ஆரம்பிச்ச கங்கா, கொஞ்ச நாள் கழிச்சு கணவனுக்கே தெரியாம நரசிம்மளு கூட பேசிப் பழகிட்டு இருந்ததா சொல்லப்படுது. நரசிம்மளுக்கும், கங்காவுக்கும் இடையில இருக்குற பழக்கம் ஒருநாள் நாகராஜுக்கு தெரியவந்துருக்கு. நண்பன் ஆச்சேன்னு வீட்டுக்குள்ள விட்டா உன் புத்திய காட்டிட்டயான்னு சொல்லி நரசிம்மளு கூட சண்ட போட்டிருக்காரு. அதே மாதிரி, கஷ்டப்பட்டு வேலை பாத்து உனக்கு சோறு போடுறது நான், ஆனா, எனக்கு தெரியாம நீ இந்த அசிங்கமான வேலை பாத்துட்டு இருக்கன்னு கங்காவை கண்டிச்சிருக்காரு. எவ்வளவு கத்தி கோவப்பட்டு சண்ட போட்டாலும் ரெண்டு பேருமே நாகராஜுவோட பேச்ச கேட்குற மாதிரி தெரியல. இதனால கணவன் - மனைவிக்கு இடையில கடந்த ஒரு வருஷமாவே பிரச்சினை நடந்துட்டு இருந்துருக்குது. ஒரு கட்டத்துல, கங்கா, நாகராஜுவ விட்டு பிரிஞ்சு, தன்னோட அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்க. குடும்பத்த சின்னாபின்னமாக்குன நரசிம்மளு மேல உச்சகட்ட கோவத்துல இருந்த நாகராஜு, நரசிமுலுவ கொலை செய்ய பிரண்ட்ஸோட சேர்ந்து திட்டம் போட்டுருக்கார். நைட்டு 8.30 மணிக்கு வேலைய முடிச்சிட்டு பைக்ல போய்ட்டு இருந்த நரசிம்மளுவ வழிமறிச்சு தாக்கி, கார்ல ஏத்தி கடத்திட்டு போய்ருக்காங்க. கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரத்துக்கு மேல கார்லேயே சுத்திட்டு இருந்துருக்காங்க.. காருக்குள்ள வச்சு, நாகராஜும், அவனோட பிரண்ட்ஸும் சேர்ந்து நரசிம்மளுவ சரமாரியா தாக்கி துன்புறுத்திருக்காங்க. அதுக்கப்புறம், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துல வச்சு, நரசிம்மளுவோட கை, கால்கள கயிறால கட்டி வாயில பிளாஸ்டி டேப்ப ஒட்டி இரும்பு கம்பியால அடிச்சே கொன்னுருக்காங்க. அதோட சடலத்த, அங்கேயே குழிதோண்டி புதைச்சிட்டு எஸ்கேப் ஆகிருக்காங்க. இரவு நேரத்துல குழி சரியா மூடாததால, நரசிம்மளுவோட கை பகுதி வெளியே தெரிஞ்சிருக்குது. அத பாத்த ஒருசிலர் தான் போலீஸுக்கு தகவல் கொடுத்திருந்துருக்காங்க. விசாரணையில எல்லா உண்மையையும் கண்டுபிடிச்ச காவல்துறையினர், நரசிம்மளுவ கடத்திட்டு போய் கொலை செஞ்சது மட்டுமில்லாம சடலத்த குழி தோண்டி புதைச்ச, நாகராஜுவையும் அவனோட நண்பர்களையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடச்சிட்டாங்க.