ஜனநாயகன் படத்தோட 2வது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ வெளியாகி சோசியல் மீடியாவுல அதகளம் செஞ்சிட்டு வர்ற நிலையில, இது என்னப்பா தவெகவுக்கான இன்னுமொரு பாட்டு மாதிரி இருக்கேன்னு Fire விட்டுட்டு வர்றாங்க விஜய்யோட தொண்டர்கள். விஜய்க்கு கடைசி படமான ஜனநாயகன், 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாக இருக்க நிலையில, அதுக்காக ரிலீஸ் வேலை ரொம்பவே மும்முரமா நடந்துட்டு வருது. குறிப்பா, வர்ற 27ம் தேதி மலேசியாவுல சுமார் 1 லட்சம் பேருக்கு மத்தியில நடக்கப்போற ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மேல பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கு. இந்த நிலையில தான், படத்தோட 2nd single ah Release பண்ணி சோசியல் மீடியாவ ப்ளாஸ்ட் பண்ணியிருக்கு படக்குழு. இந்த பாட்ட கொஞ்சம் டீகோட் பண்ணலாம்னு பார்க்கும்போது, பாட்டுல அரசியல் இல்ல, அரசியல்ல தான் பாட்டே இருக்குங்கிறத கவனிக்கலாம். கில்லி ஜிப்சில மிகப்பெரிய கூட்டத்துக்கு இடையில குதிக்குற ஜனநாயகன், முறுக்கு மீசையோட இருக்குற காட்சி வீடியோவுல இடம்பெற்றிருக்கு. ஒரு பேரே வரலாறு, அழிச்சாலும் அழியாது, அவன் தானே ஜனநாயகன், நம்ம மக்கள் நினைக்காம ஒரு மாற்றம் பொறக்காது, தர வந்தான் தரமானவன் என்ற வரிகளோட பாடல் தொடங்க, “உன் பேர கேட்டா உடல் உறைஞ்சே போகும், விழி திரையில் பார்த்தா மனம் கறஞ்சே போகும்”ன்னு நீளுது. அதுலயும், நீ தூணா நின்னா ஒரு இனமே வாழும், நீ தூரம் போனா எங்க உயிரே போகும், அப்படிங்கிற வரிகள் விஜய்யோட அரசியல தொண்டர்கள் வரவேற்கும் விதமா எழுதப்பட்டிருக்கு. உனக்கே ஒரு யுத்தம் இனியே, உயிரே உடல் ரத்தத்துளியே, வருவேன் ஒரு பக்கத் துணையே, உயிரின் உயிரே... அப்படிங்கிறது Political battleல விஜய் கூட எல்லா நிலையிலும் துணையா நிற்கக்கூடிய அவரோட ஆதரவாளர்களோட மனநிலைய பிரதிபலிக்கிற விதமா இருக்கு. அழியாதிந்த வாளின் கதையே, முடியாதிந்த ரத்தக்கறையே, களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே... அப்படிங்கிறது எலவேஷன் வரிகளாகவும் இருக்கு. முறுக்கு மீசையோட கூலான கூலிங் க்ளாஸோட Effortless ஆ நடனமாடக்கூடிய விஜய், அடுத்த காட்சியிலயே தன்னோட பிரச்சார பேருந்துல ஏறி பொதுமக்கள் கூட செல்ஃபி எடுக்குற மாதிரியான அனிமேஷன் காட்சிகளும் இடம்பெற்றிருக்கு. இவன் வெறி ஒறங்காதே, இவன் கொடி அடங்காதே, இவன் முடி வணங்காதே... அப்படின்னு நீளக்கூடிய வரிகளுக்கு மத்தியில, முக்காலத்தில் எவரும் ஒரு இணை கிடையாதேன்னு வரக்கூடிய வரிகள் விஜய்யோட தன்னிகரில்லா உச்சத்த சொல்ற விதமா எழுதப்பட்டிருக்கு. சிங்கம் இரையாகாதேன்னு... நெருப்பா நீளக்கூடிய இந்த பாடல் முழுக்க முழுக்க விஜய்க்கான அரசியல் பாடலா அமஞ்சிருக்குறதும், சூப்பர் மேன் ரெஃபெரன்ஸ்ல மக்கள் எல்லாரும் விஜய் நெஞ்சுல கைவச்சி நிக்குறதும் புல்லரிக்க வைக்கும் காட்சிகளா இருக்க, சிம்மாசனத்துல விஜய் கால் வைக்குற காட்சிகளும் அரசியல் குறியீடாவே இருக்கு. ஒட்டுமொத்தத்துல ‘ஒரு பேரே வரலாறு’ சும்மா ப்ளாஸ்ட்டா இருக்குங்குறத மறுக்குறதுக்கு இல்ல...