மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்திற்குள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.