கேரள கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான வகையில் ஜீப்பின் மேல் அமர்ந்து சாகச பயணத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக சென்ற மாணவர்கள், விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் மேலே அமர்ந்தபடியும், தொங்கியபடியும் சென்றனர்.