பெரும்பாலான கலாச்சாரங்களில், ஒருவர் உயிரிழக்கும் போது, அந்த உடலை எரிக்கவோ அல்லது புதைக்கவோ செய்வது உண்டு. Toraja எனும் இன மக்கள், இறந்தவர்கள் உடனேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த வினோதம் ஏன்?இந்த தனித்துவமான பாரம்பரியம், ’மரணமும் இன்னொரு பெரிய பயணம்’ எனும் நம்பிக்கையின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வினோதமான பாரம்பரியத்தின் பின்னணி என்ன?இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில், Tana Toraja Regencyக்கு நீங்கள் எப்போவாவது சென்றால், உயிருடன் இருக்கும் இறந்தவர்களை காணும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இந்த பகுதியில், இறுதிச் சடங்கிற்கான செலவு மிகவும் அதிகமாம். அதாவது, மற்ற நாடுகளைப் போல இன்றி, இறுதிச் சடங்குகளை இந்த மக்கள் ஒரு கொண்டாட்டமாகவே பார்க்கின்றனர். அதாவது, இந்திய மதிப்பில், சுமாராக 4 கோடியே 44 லட்சம் ரூபாய் வரை செலவாகிறதாம். இதுமட்டுமின்றி, இங்கு இறுதி சடங்குகள் வழக்கமாக, 5 நாள் நிகழ்வு. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எருமைகள் மற்றும் பன்றிகளை பலியிட வேண்டும். நூற்றுக்கணக்கான விருந்தினர்களுக்கு உணவளிக்க வேண்டும், இறந்தவர்களுக்கு ஒரு புதிய குடிசை கட்டி, அதனை இறுதிச்சடங்கு நடைபெறும் போது எரிக்க வேண்டும். இதுதான் இங்கே சடங்கு நடத்தும் முறை. இறந்தவரின் உடலை ஏன் மம்மி மாதிரி பாதுகாத்து வைக்கின்றனர். மரணமும், நம் வாழ்க்கை போல ஒரு பெரிய பயணம், அதைப் போற்றும் விதமாக, அந்த நம்பிக்கையை கடைப் பிடிக்க தான் இப்படி செய்யப்படுகிறது என்று, காரணம் சொல்கின்றனர். இறந்தவரின் உடலை மம்மி மாதிரி மாற்றி, அவர்களுடன் பேசுவது, உணவு படைப்பது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆடைகளை அணிவித்து, இளம் தலைமுறையினருக்கு காட்டுவது. இது தான், “மனேன்” என்கிற சடங்காம்... இறுதி சடங்கிற்கே, கிட்டத்தட்ட நான்கரை கோடி ரூபாய் ஆகிறது. இந்த சடங்கு செய்கிற வரைக்கும் உடல்களை பாதுகாக்க எவ்வளவு செலவு ஆகும் என்று யோசித்து பாருங்கள். அதனால் தான், நிறைய பேர், அவர்களது குடும்பத்தில் இன்னொரு நபர் உயிரிழக்கும் வரைக்கும் சடலத்தை பாதுகாப்பாக வைக்கின்றனர். உதாரணத்திற்கு, ஒரு நபர் உயிரிழந்தால், அவரது கணவர் அல்லது மனைவி உயிரிழக்கும் வரை அவர்களது உடலை Embalming செய்து பாதுகாத்து, இரண்டு பேருக்கும் ஒன்றாக இறுதிச்சடங்கு நடத்துகின்றனர். இந்த Tana Toraja Regency, இதன் அழகான பசுமையான நிலப்பரப்புக்கு பெயர் பெற்ற இடம். ஆனால், இந்த பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், ஃபோட்டோ, வீடியோ எடுப்பதற்கு மட்டும் இங்கு வருவது கிடையாது. உள்ளூர் கலாச்சாரத்தை அனுபவிக்கவும், மரணம் மற்றும் இறுதிச் சடங்குகளின் தனித்துவமான சடங்குகளைப் பார்க்கவும் தான் இந்த இடத்திற்கு வருகின்றனர். கேட்கவே மிகவும் வினோதமாக இருந்தாலும், பல பேர் இறந்தவர்கள் இடையே நடமாடும் அனுபவத்தை பெற இந்த இடத்துக்கு வருகின்றனர். உலகம் ஒரு ஆச்சரியமான மேடை தான்...