இருபது பேருடன் சென்ற துருக்கி ராணுவ விமானம், நடுவானில் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். அஜர்பைஜானில் இருந்து புறப்பட்டு துருக்கி சென்ற C-130 ரக விமானம் ஜார்ஜியாவில் தீப்பிடித்து விழுந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது.அஜர்பைஜான் நாட்டின் எல்லைப்பகுதியில் விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.