திருப்பதி லட்டு தயாரிக்க, கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட வழக்கில் தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவரின் தனி உதவியாளர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் தயார் செய்வதற்காக, திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் அனுப்பிய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வரும் நிலையில், தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டியின் அப்போதைய தனி உதவியாளர் அப்பண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.