எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள ’காந்தா’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில், படத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் பதில் அளிக்க வேண்டும் என்று, சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.கே.தியாகராஜ பாகவதர் பற்றி அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல், அவதூறான முறையில் சித்தரித்து படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பூர்வ வாரிசுகளிடம் அனுமதி பெறவில்லை என்றும் அவரின் மகள் வழிப் பேரன் தியாகராஜன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை நகர 7ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றம், நவம்பர் 18ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.