மத்திய பிரதேசத்தில் பெண் கொலை வழக்கில் தொடர்புடைய சான்றுகளை எலிகள் அழித்து விட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரியின் கூற்றை கேட்ட நீதிபதி அவரை கடுமையாக சாடினார். மேலும் வருங்காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வகையில், உரிய நடவடிக்கை எடுக்கும் படி போலீசாருக்கு அறிவுறுத்தினார்.