கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் பைக்கில் என்ற இருவர் மீது அதிவேகத்தில் பின்னால் வந்த கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹைதராபாத்தில் இருந்து மகாராஷ்டிரா நோக்கிச் சென்ற கார், சிட்டகுப்பா தாலுகாவில் உள்ள நிர்னா கிராஸ் பகுதியில், முன்னாள் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற இருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.