அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்த காரில் இருந்த பெண்ணை தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் பத்திரமாக மீட்ட காட்சி வெளியாகியுள்ளது.அரிசோனா மாகாணத்திற்கு உட்பட்ட வால் விஸ்டா பகுதியில் சாலையில் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கார் தீப்பற்றி எரிந்ததால், அதன் கதவுகள் திறக்க முடியாமல் பெண் சிக்கி தவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காரின் கண்ணாடியை உடைத்து பெண்ணை வெளியே கொண்டு வந்தனர்.