கேரளாவில், சாலையின் எதிர் திசையில் வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களுக்கு இடையே சைக்கிளில் வந்த சிறுவன், சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தளிப்பரம்பு என்ற இடத்தில், பள்ளி முடிந்து விட்டு வீட்டிற்கு திரும்பிய ஒன்பது வயது சிறுவன் சாலையை கடக்க முயன்றான் அப்போது சாலையின், இருபுறமும் வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தில் மோதி சிறுவன் நடு ரோட்டில் தூக்கி வீசப்பட்டான். இதில், ஒன்பது வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததோடு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அருகில் இருந்தவர்கள் உடனே சிறுவனை ஒரு கடைக்குள் தூக்கிச் சென்று தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.