நாமம்போட்டு நல்லவன்போல் அமர்ந்திருக்கும் இந்த சர்வேயர் 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அடித்தே கொலை செய்துள்ளது பல பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பைதான் ஏற்படுத்தி உள்ளது..காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை பிரிந்து 9 வயது மகள் மற்றும் 5 வயது மகனுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். பெண்ணின் தாய் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் நிலையில் நிலம் அளவீடு செய்யும் பணி செய்து வரும் ரஜேஷ் கடைக்கு அடிக்கடி டிபன் சாப்பிட சென்றுள்ளார். இதனை பயன்படுத்தி அந்த குடும்பத்தினருன் நெருங்கி பழகி வந்த சர்வேயர் ராஜேஷ், தான் பணிபுரியும் பரந்தூர் பசுமை வெளி நிலைய திட்ட நில எடுப்பு அலுவலகத்தில் பெண்ணுக்கு தற்காலிக உதவியாளர் பணியும் வாங்கி கொடுத்து உள்ளார். உதவியாளர் பணியை வாங்கி கொடுத்ததோடு விடாமல் அந்த பெண்ணின் மகளையும், மகனையும் அடிக்கடி தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். நன்கு பழகுவதாக நம்பி தனது குழந்தைகளை ராஜேசுடன் அனுப்பிய சம்பவத்தன்று வழக்கம்போல சர்வேயர் ராஜேசுடன் வீட்டுக்கு சென்றுவிட்டு வந்த சிறுவன் மயங்கிய நிலையில் வீட்டில் படுத்திருந்தான். டிபன் கடையில் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு வந்த பாட்டியும், தாயும் சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லை என எண்ணி மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.. இதையடுத்து சிறுவனின் சகோதரியிடம் விசாரித்தபோது, ராஜேஷ் அடிக்கடி வீட்டுக்கு அழைத்து சென்று தன்னிடமும் தம்பியிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதற்கு இணங்காத தம்பியை உடலின் பல்வேறு இடங்களில் பலமாக அடித்து கொலை செய்து சத்தமில்லாமல் வீட்டில்போட்டுவிட்டு சென்றதாகவும் அதிர வைத்துள்ளார். இதுகுறித்து சிறுவனின் தாய் அளித்த புகாரின்பேரில் ராஜேஷ் மீது போக்சோ மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறைக்கு கம்பி எண்ண அழைத்து சென்றனர்..