திரைத்துறையில், வயது பார்த்து திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் நடிகர், நடிகைகளிடம் இல்லை. ஜாதி, மதம், இனம், மொழி போல், வயதையும் கடந்து காதலித்து திருமணம் செய்து வருகின்றனர். வயது வித்தியாசம் ஒருபோதும் இரு மனங்களின் இணைவுக்கு தடையாக இருந்ததில்லை. தற்போது பேசுபொருளாகி இருப்பது இதுதான்... சுமாராக 54 வயதான பிரபல நடிகர், 37 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். யார் இவர்கள்? காதல் மலர்ந்த பின்னணி என்ன?. இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள மனிஷ் சவுத்ரியின் காதல் கதை தான் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மனிஷ் சவுத்ரிக்கு 2016ஆம் ஆண்டு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், ஏதோ சில காரணங்களால் அது, திருமணம் வரை செல்லவில்லை. இதையடுத்து, அவர் கடந்த 2023ஆம் ஆண்டு தனது 54ஆவது வயதில் ஸ்ருதி மிஸ்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதில் வியப்பான ஒன்று என்னவென்றால், ஸ்ருதிக்கு அப்போது வயது 37. இருவருக்கும் இடையில் 17 வயது வித்தியாசம். இவர்களது இந்த வயது வித்தியாசம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்திருந்த மனிஷ் சவுத்ரி கூறியதாவது; எங்களுக்கு இந்த வயது வித்தியாசம் ஒரு போதும் பெரிய பிரச்சனையாக இருந்தது இல்லை. ஆனால், ஸ்ருதிக்கு அவரது வீட்டில் உள்ளவர்களை சமாதானப்படுத்த 2 ஆண்டுகள் தேவைப்பட்டது இதையடுத்து பேசிய ஸ்ருதி கூறியதாவது: மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் தான் இருவரும் சந்தித்து கொண்டோம். அப்போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. வயது எங்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. என் வீட்டில் நான் மனிஷ் சவுத்ரியை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என உறுதியாக கூறினேன். அதன் பிறகே அனைவரும் சம்மதித்தனர். இவர்களது இந்த வலிமையான காதல் கதை இணையவாசிகளின் நெஞ்சங்களைக் கவர்ந்துள்ளது. மேலும், யாருக்கு யார் மீது வேண்டுமானாலும் காதல் வரலாம். அதற்கு எதுவுமே தடையாக இருக்கக் கூடாது. இறுதியில் அன்பு மட்டுமே வெல்லும் எனவும் கமென்ட் செய்து வருகின்றனர். மனிஷ் சவுத்ரி, கடந்த ஜூலை மாதம் விஜய் தேவரகொண்டா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘கிங்டம்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்கியுள்ள ‘பேட்ஸ் ஆஃப் பாலிவுட்’ வெப்சீரிஸில் நடித்துள்ளார்.Manish Chaudhari - Shruti Mishraவின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.”கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலைஇன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று..."