ராஜஸ்தானில் 150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுமியை மீட்கும் பணி, தொடர்ந்து ஆறாவது நாளாக நடைபெற்று வருகிறது. கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த சேட்னா எனும் சிறுமி, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத் துறையினர் 6 நாட்களாக சிறுமியை மீட்க போராடி வருகின்றனர்.