உத்தரபிரதேச மாநிலம் மஹசி பகுதியில் ஓநாய்கள் தாக்கி 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். அதே போல் பார்பிகா ஹர்திபகுதியில், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 வயது சிறுவன் மற்றும் ஒரு பெண்ணையும் ஓநாய் தாக்கியுள்ளது. பஹ்ரைச் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஓநாய்கள் ஊருக்குள் புகுந்து குழந்தைகளை கடித்துக் கொல்வது தொடர்கதை ஆகியுள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் ஓநாய்கள் தாக்கி 7 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியான நிலையில், அவற்றை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது வரை 4 ஓநாய்களை கூண்டுவைத்து பிடித்துள்ள வனத்துறையினர், மீதமுள்ள ஓநாய்களையும் பிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.