மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த 23 வயது இளம்பெண், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் வசித்து வந்த எம்.பி.ஏ. மாணவி பரினிதா ஜெயின், தனது உறவினரின் ஹல்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த அவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார்.