தென் கொரியாவின் சியோலில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார். மியோங்கில்-டோங் பகுதியில் உள்ள ஒரு சந்திப்பில் தோராயமாக 20 மீட்டர் அகலமும் 20 மீட்டர் ஆழமும் கொண்ட பள்ளம் ஒன்று சாலையின் நடுவே திடீரென உருவானது. இந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் உள்ளே விழுந்து உயிரிழந்தார்.