டியூஷன் முடிந்து, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுமி. இருள் சூழ்ந்த இடத்தில் நடந்து சென்ற போது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள். கத்திக் கூச்சலிட்டவாறே அரக்கர்களிடம் இருந்து தப்பி ஓடிய சிறுமி. அரக்க கூட்டத்தை காட்டிக் கொடுத்த சிமெண்ட் படிந்திருந்த ஒற்றை செருப்பு. பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தது எப்படி.? நடந்தது என்ன.?கொல்கத்தா போலீஸ் ஸ்டேஷனுக்கு, கண்ணுல கண்ணீரோடயும், முகத்துல பதற்றத்தோடயும் தம்பதி ஒருத்தங்க வந்துருக்காங்க. அவங்கள பாத்த போலீஸ்காரங்க, எதுக்கு இவ்வளவு பதற்றமா இருக்கீங்க, என்னாச்சுன்னு கேட்டுருக்காங்க. அப்ப, தங்களோட பொண்ணுக்கு நடந்த கொடூரத்த பத்தி வாய் விட்டு சொல்ல முடியாம, வீட்டுல இருந்தே கைப்பட எழுதி, புகார் கடிதத்த கொண்டு வந்திருக்காங்க. அத படிச்சதும் தான், அந்த பெற்றோர் கண்ணுல இருக்குற வலிக்கும், வேதனைக்கும் பின்னாடி இருக்குற காரணம் தெரிய வந்திருக்கு.கொல்கத்தாவுல உள்ள டம் டம் ஏரியாவ சேர்ந்த 14 வயது சிறுமி, வீட்டுல இருந்து கொஞ்ச தொலைவுல உள்ள ஒரு டியூசன் சென்டர்ல தெனமும் ஈவ்னிங் 6 மணில இருந்து 8 மணி வரைக்கும் டியூசனுக்கு போய்ட்டு வர்றது வழக்கம். அப்படித்தான், சனிக்கிழமையும் வழக்கம்போல டியூஷன்க்கு போய்ருக்காங்க. க்ளாஸ் முடிஞ்சதுக்கு அப்புறம், பஸ் ஏறி வீட்டு பக்கத்துல உள்ள ஸ்டாப்ல இறங்கி, அங்க இருந்து வீட்டுக்கு நடந்து போய்ட்டு இருந்துருக்காங்க. பஸ் ஸ்டாப்புக்கும், அந்த சிறுமியோட வீட்டுக்கும் நடுவுல உள்ள ஒரு இடத்துல லைட் வெளிச்சம் இல்லாம, இருட்டா இருக்கும். இந்த சிறுமி கரெக்ட்டா அந்த இடத்துல நடந்து வந்துட்டு இருந்தப்ப, திடீர்னு பின்னாடி ரிக்சாவுல வந்த மூணு பேரு, சிறுமிய பிடிச்சு இழுத்துட்டு போய் மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை பண்ணியிருக்காங்க. அந்த அரக்கர்கள் கிட்ட இருந்து தப்பிக்க முடியாம, படாத பாடுப்பட்ட சிறுமி, ஒருவழியா போதையில இருந்த கொடூரர்களை தள்ளி விட்டுட்டு கத்தி, கூச்சல் போட்டுக்கிட்டே வீட்ட நோக்கி ஓடிருக்காங்க. கொஞ்ச தூரத்துல வெளிச்சமான இடம் இருந்ததாலயும், அங்க சில ஆட்கள் நடமாட்டம் இருந்ததாலயும் அந்த பொண்ண ஃபாலோ பண்ணாம, அந்த மூணு பேரும் இன்னொரு பக்கமா தப்பிச்சு ஓடிருக்காங்க. எப்படியோ தப்பிச்சு வீட்டுக்குப்போன சிறுமி, தன் பெற்றோர் கிட்ட, நடந்தத சொல்லிருக்காங்க. அதுக்கப்புறம், இத இப்படியே விடக்கூடாது, போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணா தான் நாளைக்கு இதே மாதிரி வேற எந்த பொண்ணுக்கும் நடக்காம இருக்கும்னு நினச்சு, சிறுமியோட பெற்றோர் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிருக்காங்க. புகார் கடிதத்த வாங்குன போலீஸ், நேரா, சம்பவம் நடந்த இடத்துக்குப் போய் அங்க உள்ள சிசிடிவி காட்சிகள ஆய்வு பண்ணிருக்காங்க. அதுல, இருள் சூழ்ந்த இடத்துல சிறுமி நடந்து வந்ததும், அங்க மூணு பேரு சிறுமிகிட்ட அத்துமீறுன காட்சிகளும், அவங்க கிட்ட சிறுமி கத்தி, கூச்சல் போட்டுக்கிட்டே தப்பிச்சு ஓடிவந்த காட்சிகளும் இடம்பெற்றிருந்துச்சு. அந்த சிறுமியோட முகம் க்ளியரா தெரிஞ்சதே தவிர, சிறுமி கிட்ட தவறா நடக்க பாத்தவங்களோட அடையாளம் தெளிவா தெரியல. அந்த ஏரியாவுல கடை வச்சிருக்குறவங்க, நடந்து போறவங்கன்னு ஏகப்பட்ட பேர் கிட்ட விசாரணை பண்ணியும், போலீஸுக்கு எந்த துப்பும் கிடைக்கல. அப்பதான், ரோட்டுல ஒரு செருப்பு கிடந்தது, போலீஸ் கண்ணுல பட்டுருக்கு. அந்த செருப்புல ஃபுல்லா சிமெண்ட்டும் ஒட்டிருந்துருக்கு. சிறுமிகிட்ட அத்துமீறவனங்க தான், பதற்றத்துல செருப்ப விட்டுட்டு தலைதெறிக்க ஓடிருப்பாங்கன்னு நினச்ச போலீஸ், அதுல சிமெண்ட் ஒட்டிருக்குறதால, அவங்க கட்டடத் தொழிலாளியா இருக்குறதுக்கு வாய்ப்பிருக்குன்னு யோசிச்சாங்க. அதனால, மறுநாள் காலையில, அந்த ஏரியா சுத்தி எங்க எங்கலாம் கட்டட வேலை நடக்குதுன்னு லிஸ்ட் எடுத்தாங்க. அதுக்கப்புறம், கட்டட வேலை நடக்குற இடத்துக்கு நேரடியா போய், சிறுமி சொன்ன அங்க அடையாளங்கள வச்சு, அந்த அரக்கர்களை தேடுனாங்க. அதுல, சந்தேகப்படும்படியான நபர்கள பிடிச்சு, பாதிக்கப்பட்ட சிறுமி முன்னாடி நிக்க வச்சிருக்காங்க. அப்பதான், இருட்டுல வச்சு தன்கிட்ட அத்துமீறுனவங்கள அந்த சிறுமி தெளிவா அடையாளம் காட்டிருக்காங்க. சிறுமி கை காட்டுன மூணு பேருகிட்ட கிடுக்குப்பிடி விசாரணை நடத்துனப்ப, அவங்க, அதே ஏரியாவ சேர்ந்த சஞ்சு சாஹா, விக்கி, ராஜேஷ்-ங்குறது தெரிய வந்திருக்குது. மூணு பேரும் கட்டட தொழிலாளியா வேலை பாத்துட்டு இருந்ததும், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல, சிறுமி தனியா நடந்து போனத பாத்ததும் பாலியல் அத்துமீறல்ல ஈடுபட்டதும் விசாரணையில உறுதியாகிருக்கு.. அதுக்கப்புறம், மூணு பேர் மேலயும் போக்சோ வழக்குபதிவு பண்ண போலீஸ் நீதிமன்றத்துல ஆஜர்படுத்தி சிறையில தள்ளிட்டாங்க. இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | உன் கணவர விட்டுட்டு வா - இளம்பெண்ணுக்கு மெசேஜ் கும்மி எடுக்கப்பட்ட இளைஞர்