பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் கிளாசனுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.போட்டியில் கிளாசன் 97 ரன்னில் ஆட்டமிழந்ததால் விரக்தியில் ஸ்டெம்புகளை எட்டி உதைத்தார். இது ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அவருக்கு அபராதம் விதித்து ஒரு கரும்புள்ளியையும் வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது.