நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்புல உருவாகியிருக்கு மெய்யழகன். 1996-ல தனது வீட்ட காலி பண்ணிட்டு சொந்த ஊரான தஞ்சாவூர விட்டு இரவோட இரவா அரவிந்த் சாமியின் குடும்பம் கிளம்புறது மாதிரியான காட்சிகளுடன் தொடங்குது படம். அதுக்கு அப்புறம் எதுக்காகவும் ஊர் பக்கம் போகாத அரவிந்த சாமி பல வருஷங்களுக்கு அப்புறம் தனது தங்கையின் திருமணத்துக்காக மீண்டும் தஞ்சாவூருக்கு போறாரு. அங்க போன அரவிந்த் சாமி மீண்டும் தனது சொந்த காரங்கள சந்திக்கிறாரு, அங்க கார்த்தியையும் சந்திக்கிறாரு. அப்புறம் கார்த்தியும் அரவிந்த் சாமியும் தங்களது நினைவுகள பகிர்ந்துக்குறது மாதிரி அமைஞ்சிருக்கு மெய்யழகன். கார்திக்கும் அரவிந்த் சாமிக்கு என்ன உறவு அப்படிங்கிறது தான் படத்தோட கதை.சின்ன வயது அரவிந்த் சாமியா வர்றாரு வட சென்னை, கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்கள்ல நடிச்ச சரண். அரவிந்த் சாமி மற்றும் கார்த்தியின் காம்போ நல்லாவே ஒர்க் அவுட்டாகியிருக்கு. அதுவும் கார்த்தி போற போக்குல செய்யுற சில விஷயங்கள் காமெடியா நல்லாவே அமைஞ்சிருக்கு. அரவிந்த் சாமி, கார்த்தி நடிச்சிருக்க பகுதிகள்ல வர்ற எமோஷனல் காட்சிகள் பார்க்குறவங்கள கண்கலங்க வைக்கும் விதமா இருக்கு. குடும்பம், உறவுகள்னு வர்ற படங்கள்ல ராஜ்கிரண் கண்டிப்பா இடம்பெற்றிருப்பாரு. ராஜ்கிரண் - ஜெயப்பிரகாஷ் இடையிலான போன் உரையாடல் அதுல இருக்குற அத்தான் செண்டிமண்ட் கிளாஸ். ஸ்ரீதிவ்யா வர்ற பகுதிகள் குறிப்பா ஜல்லிக்கட்டு காளைய பிடிச்சிட்டு வர்ற காட்சிள் ரசிக்க வைக்குது. கோவிந்த் வசந்த்தா-வின் இசை இந்த படத்த தூக்கி நிறுத்தியிருக்குனே சொல்லலாம். படத்துல காட்சிகளோடயே பாடல்கள் பயணிக்கிறது ரசிக்க வைக்குது. பைட் சீகுவன்ஸ், காமெடிக்குனு தனி நடிகர்கள் இல்லாமயே படம் ஓரளவு எங்கேஜிங்-ஆ தான் போகுது.மெய்யழகன் படம் பல இடங்கள்ல 96 படத்த நினைவுபடுத்தும் நிலையில படத்துக்குள்ளயே பல இடங்கள்ல 96 படத்தின் ரெஃபரன்ஸ் இருக்குறத தவிர்த்திருக்கலாம். அதே போல அரவிந்த் சாமி அவரோட தங்கைக்கு கல்யாணத்துக்கு கிஃப்ட் கொடுக்கும் காட்சிகளின் நீளத்த குறைச்சிருக்கலாம். படத்துல கார்த்தி ஜல்லிக்கட்டு அரசியல் தொடங்கி ஈழத்தமிழர், தூத்துக்குடி துப்பாக்கிசூடு வரைக்கும் பேசுறாரு. அந்த இடங்கள்ல படம் கதைய விட்டு வெளியே விலகிபோற பீல் ஏற்படுது. படத்தின் நீளம் படத்தின் மைனஸா அமைஞ்சிருக்கு. கதை முழுக்க முழுக்க கார்த்தி மற்றும் அரவிந்த் சாமிக்கும் இடையிலேயே தான் ஓடுது.