ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு முனிசிபல் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் சுவாமி வயது (38) இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் கார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை இவரது மனைவி காயத்ரி உறவினரின் திருமணத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது சுவாமி இரவு பணி முடித்துவிட்டு இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு 6 லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் 9 சவரன் தங்கநகை மற்றும் ரொக்கம் 15 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளையடிக்கபட்டது தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக சுவாமி என்பவர் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு திருடு போன வீட்டில் அருகே சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்த கொள்ளையர்களை போலிசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.