6 நாட்களில் 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 66 விமானங்கள் போயிங் 787 ரக விமானங்கள் என கூறப்படுகிறது. இதனிடையே ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன மூத்த அதிகாரிகளுடன் மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தியது.