இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் பிரிட்டிஷ் லெஜியன் நினைவு விழாவில், மன்னர் சார்லஸ், ராணி கமிலா மற்றும் இளவரசி கேத்தரின், இளவரசர் ஜார்ஜ் உள்ளிட்ட அரசு குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இரண்டாம் உலகப் போரின் 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ராயல் ஆல்பர்ட் ஹாலில் நினைவு கூரல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ராயல் ஆல்பர்ட் ஹால் முழுவதும் இரண்டாம் உலகப் போரை நினைவு கூரும் படங்களால்அலங்கரிக்கப்பட்டிருக்க, அனிமேஷன் போர் விமானம் ஒன்று பறந்து வந்து, போரை நினைவு கூர்ந்தது. இதனை தொடர்ந்து இசைக்கருவிகள் முழங்க உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.