நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம், ரிப்பன் மாளிகை உட்பட பல்வேறு அரசு கட்டிடங்கள் மூவர்ணத்தில் ஜொலிக்கின்றன.ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று அரசு கட்டிடங்கள் மூவர்ணத்தில் ஜொலிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையில் உள்ள கட்டிடங்களும் மூவர்ணத்தில் ஜொலிக்க வைக்கப்பட்டிருக்கின்றன.