சுபமுகூர்த்த தினம் என்பதால் திருத்தணி முருகன் கோவிலில் இன்று மட்டும் 72 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், மணமக்களை வாழ்த்த வந்தவர்களால், கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திருமணம் முடிந்தவுடன், மணமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து முருகப் பெருமானை தரிசித்து சென்றனர். தனியார் திருமண மண்டபங்களிலும் ஏராளமான திருமணங்கள் நடந்ததால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.