திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. நேபாளம்-திபெத் எல்லை பகுதியில் காலை 6:35 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது. இதில் ஏராளமான கட்டிடங்கள் சரிந்து விழுந்ததில் 126 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 180-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.