விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து' வீடியோ பாடல் யூடியூபில் 70 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன், விடிவி.கணேஷ், ரெடின்கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.