தாய்லாந்து நாட்டின் பாங்காங்கில் 6-வது பிம்ஸ்டெக் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தாய்லாந்து பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.