ப்ளு ஆரிஜின் விண்வெளி நிறுவனம் தயாரித்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் விண்வெளி சென்ற 6 பெண்கள் கொண்ட குழு, மீண்டும் பத்திரமாக பூமி திரும்பியது. பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி உள்ளிட்டோர் பூமியின் வளிமண்டல எல்லை என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கர்மன் கோட்டை கடந்து, சரியாக பூமியில் இருந்து 100 கிலோ மீட்டருக்கும் கூடுதலான தூரத்திற்கு சென்று பின்னர் மீண்டும் திரும்பி வந்தனர்.