பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் 15 பேர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. சோஹானா பகுதியில் உள்ள இந்த கட்டடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் 15 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், தீயணைப்புத் துறையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு பெண்ணை படுகாயங்களுடன் மீட்டுள்ளனர்