நாட்டின் மூன்றாவது பெரிய செல்போன் நிறுவனமான வோடபோன், வரும் மார்ச் மாதத்திற்குள் நாட்டின் ஆயிரக்கணக்கான பகுதிகளில் 5ஜி சேவையை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வோடபோனின் தலைமை செயல் அதிகாரி அக்ஷயா மூந்த்ரா வெளியிட்ட அறிவிப்பில், எரிக்சன்,நோக்கியா மற்றும் சாம்சங்குடன் இணைந்து 5ஜி சேவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.