காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் 52 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாகவும், அவை அழுகும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் கண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். கடந்த ஆண்டு பாதிப்பின் போது நிவாரணம் வழங்காத தமிழக அரசு நடப்பாண்டு மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.