இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் மூலம் நாட்டிற்கு 11 ஆயிரத்து 637 கோடி ரூபாய் பொருளாதார பலன் கிடைத்ததாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. அக்டோபர் 5 முதல் நவம்பர் 10 வரை உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை தவறவிட்டாலும், இந்த தொடர் மூலம் இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக லாபம் கிடைத்ததாக ஐசிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகக்கோப்பை தொடரின் போது 48 ஆயிரத்துக்கும் அதிகமான நிரந்தர மற்றும் தற்காலிக வேலைவாய்ப்புகள் உருவானதாகவும், போட்டிகளை காண வந்த ரசிகர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு சென்றதில் சுற்றுலா மேம்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.