சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X பதிவில், இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்வதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.