சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியை கண்டு ரசித்தவர்களில், கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியானது தொடர்பாக, விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். 15 லட்சம் பேர் கண்டு களித்த வான் சாகச நிகழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியும், வெயிலின் தாக்கத்தினாலும் 5 பேர் பலியாகினர். இந்நிலையில் உயிரிழப்புக்கு என்ன காரணம், யாருடைய அஜாக்கிரதையால் உயிரிழப்புகள் ஏற்பட்டன? என்பவை குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு, தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.