உத்தரபிரதேசம் ஷாஜஹான்பூர் மாவட்டம் மதன்பூர் காவல் நிலைய பகுதியில் லாரியும் காரும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நாக்லா பன்வாரி கிராமத்தில் வசித்த துணி வியாபாரி ரியாசத் அலி, தனது குடும்பத்தினருடன் ஷாஜகான்பூரில் இருந்து டெல்லிக்கு சென்றார். மதன்பூர் பகுதியில் வந்தபோது, சாலையில் குறுக்கே வந்த விலங்கின் மீது மோதமால் இருக்க திருப்பிய போது கார் கட்டுபாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பாக மதன்பூர் போலீசார் லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் .