சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகசத்தை காண வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது மரணத்திற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சாகச நிகழ்ச்சியை காண 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என கூறப்பட்ட நிலையில், மக்கள் சிக்கலின்றி நிகழ்ச்சியை காணவும், பாதுகாப்பாக திரும்பி செல்லவும் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.