உத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்ததில் வீடு இடிந்து 5 பேர் உயிரிழந்தனர். அந்த வீட்டில் 18 பேர் வரை தங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில் பலத்த காயமடைந்த 8 பேரை மீட்ட மீட்பு படையினர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.