தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 5 கொலைகள் நடைபெறுகிறது. இது தான் திராவிட மாடலில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் லட்சணமா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 2016 முதல் 2019 வரையிலான அதிமுக ஆட்சியில் 6,477 கொலைகள் நிகழ்ந்ததாகவும், திமுகவின் ஆட்சியின் 4 ஆண்டுகளில் அது அதிகரித்து 6570 கொலைகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.