2025ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றன. அதன்படி ஹூண்டாய் கிரெட்டா இவி, மாருதி சுஸூகி இவி எக்ஸ், டொயோட்டா இவி, டாடா ஹாரியர் இவி, மஹிந்திரா பிஇ 05 ஆகிய கார்கள் அறிமுகமாகவுள்ளன.