மான்செஸ்டரில் நடைபெறும் இந்தியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியில், எலும்பு முறிவு காரணமாக தொடரில் இருந்து விலகிய சோயீப் பஷீருக்கு பதிலாக லியாம் டாசன் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தொடரில் 2க்கு 1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.