இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டியில் தோல்வியடைந்தது.