கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது. இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் நான்கு பேர் பலியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும் கர்நாடகா மற்றும் பஞ்சாபில் தலா ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வயதானவர்கள் என்பதுடன் பல்வேறு இணை நோய்களால் அவதிப்பட்டு வந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.